தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில்
மகாராஜகடை பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை ஆந்திரா மற்றும் கர்நாடகா வனப்பகுதிகளுக்கு விரட்ட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆந்திரா வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த 5 காட்டு யானைகள் கிருஷ்ணகிரி அருகே உள்ள மகராஜாகடை பகுதிகளில் முகாமிட்டுள்ள இந்த யானைகள் குடியுருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு புகுந்து அட்டாகாசம் செய்து வருவதால் கிராம மக்கள் மீதியடைந்துள்ளனர்.
இந்த யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் முனியப்பன் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தாலும் இந்த யானைகள் நகராமல் போக்குகாட்டி வருகிறது
மேலும் இந்த யானைகள் தொடர்ந்து மகராஜாகடை பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி, வாழை, தென்னை, மா உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து இத்த காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது
ஆந்திராவில் இருந்து இடம் பெயர்ந்துள்ள 5 காட்டு யானைகளால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளதோடு கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய வனப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள இந்த யானைகளால் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,
ஆகையால் தொடர்ந்து மகராஜாகடைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள இந்த யானைகளை ஆந்திரா வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட நடவடிக்கை எடுத்து யானைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ