அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், சூளகிரி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட புக்கசாகரம், தோரிப்பள்ளி, காமன்தொட்டி , கானலட்டி, கோனேரிப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் சூளகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் SVS மாதேஷ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி  மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே பி எம் சதீஷ்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பூத் கமிட்டி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

பாசறை மாவட்ட துணை செயலாளர் ஜோதி பிரகாஷ், பாசறை ஒன்றிய செயலாளர் மஞ்சுநாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சந்திரப்பா, பாப்பையா, முன்னாள் கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வெங்கட்ராஜ், சார்பு அணி ஒன்றிய நிர்வாகிகள் முரளிமோகன், சின்னப்பா, வெங்கட்ராஜ், வெங்கடபத்தி, பாபு, பசுவராஜ், கிருஷ்ணப்பா மற்றும் பொது கிளை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ