தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நூதன போராட்டம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியின்படி 313 அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சாப்பிடும் தட்டுகள் மூலம் ஓசை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட போது அங்கன் வாடி உதவியாளர்கள் இரண்டு பேர் மயங்கி விழுந்தால் பரப்பரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மற்றும் சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 15 வது நாளாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் சத்துணவு ஊதியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போது மாநில துணைத் தலைவ நோஹிரா, மாநில செயற்கு குழு உறுப்பினர் குமாரி கஸ்தூரி, மாவட்ட செயலாளர் பார்வதி, மாவட்ட தலைவர் முனியம்மா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் அனிதா, மாநில செயற்குழு உறுப்பினர் முருகம்பா, மாவட்டத் தலைவர் குணவதி, மாவட்ட செயலாளர் வெண்ணிலா மற்றும் நவீனா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் சாப்பிடும் தட்டுகள் மூலமாக ஒலி எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 313 தேர்தல் வாக்குறுதியின்படி.....
அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூபாய் 19,500 வழங்க வேண்டும்.
சமையலர், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூபாய் 15,700 அடிப்படையில் காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும்,

அங்கன்வாடி சத்துணவு திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,
மினி அங்கன்வாடி மையங்களை மெயின் அங்கன்வாடி மையங்களாக மாற்றிட வேண்டும்,
ஓய்வூதியருக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்,
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
அப்போது மருதாண்டப்பள்ளி மற்றும் எலத்தகிரியை சேர்ந்த அங்கன்வாடி உதவியாளர்களான மஞ்சுளா , சமாதானமேரி ஆகியோர் மயங்கி விழுந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணியன் தனது ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ
