கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக் குமாருக்கு  பதிலாக உள்ளூர் பகுதியை சேர்ந்த்தவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக் குமாருக்கு  பதிலாக உள்ளூர் பகுதியை சேர்ந்த்தவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்.

கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக் குமாருக்கு  பதிலாக உள்ளூர் பகுதியை சேர்ந்த்தவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்.

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட அகில இந்திய காங்., கமிட்டி தேசிய செயலாளர் செல்லகுமாருக்கு மீண்டும் ‘சீட்’ வழங்கப்பட்டதை கண்டித்து  அக்கட்சியினர் போர்கொடி தூக்கி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன் மற்றும் முன்னாள் மாவட்ட காங்., தலைவர்களான சுப்பிரமணியன், ராஜாகுமாரவேல், நாராயண மூர்த்தி, மாவட்ட துணை தலைவர் ரஹமதுல்லா உள்ளிட்ட காங்., நிர்வாகிகள்  கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து, பேட்டி அளித்தனர். 
அப்போது அவர்கள் பேசுகையில்.....

கிருஷ்ணகிரி தொகுதியில் தொடர்ந்து வெளியூர்காரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதால், மக்கள் கோரிக்கை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. கடந்த, 1981 முதல் 45 ஆண்டுகளாக உள்ளூர் காரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு வருகிறோம். ஆனால், வெளியூர் காரரான செல்லகுமாருக்கு காங்., தலைமை, 7 முறை ‘சீட்’ வழங்கி, 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 4 முறை தோல்வி பெற்றார். அவர், கட்சி தொண்டர்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே உள்ளூர் வாசிகள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். இது போன்ற நபர்கள் ராகுலையும் கட்சியும் பலவீனப்படுத்துகின்றனர். இதனால் செல்லகுமார் அவருக்கு ‘சீட்’ வழங்கியது ஏற்க முடியாது. லோக்சபாவை தவிர்த்து சட்டசபை தேர்தலிலும் வெளியூர் காரர்களுக்கு சீட் வழங்குவதில் என்ன நியாயம். இன்னும், 24 மணி நேரம் அவகாசம் உள்ளது.  அதற்குள் வேட்பாளரை மாற்றி உள்ளூர்வாசிகளை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை கூறுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ