தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் உரிய விலை கிடைக்கவில்லை என தக்காளி விவசாயிகள் வேதனை .!

கிருஷ்ணகிரி

தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் உரிய விலை கிடைக்கவில்லை என தக்காளி விவசாயிகள் வேதனை .!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் உரிய விலை கிடைக்கவில்லை என தக்காளி விவசாயிகள் வேதனை, உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக ராயக்கோட்டை, ஊத்தங்கரை, ஆலப்பட்டி, போச்சம்பள்ளி, ஓசூர், பேரிகை, சூளகிரி, கூலியம், அகரம், தவளம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி சாகுபடி. செய்வதில் விவசாயிகள் தனி ஆர்வம் காட்டுவதுண்டு. கடந்த ஆண்டு இதே நாளில் தக்காளிக்கு உரிய விலை கிடைத்ததால்  இந்த ஆண்டும் விவசாயிகள் விரும்பி தக்காளி சாகுபடி செய்தனர். ஆனால் விவசாயத்தில் எதிர்பார்த்தபடி தக்காளின் விளைச்சல் அதிகரித்துள்ளதைக் கண்டு தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அறுவடை நேரத்தில் தக்காளியின் விலை வீழ்ச்சியை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

இது  குறித்து விவசாயிகள் கூறுகையில்  தக்காளி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் செலவாகிறது, தக்காளி அதிக விளைச்சல் கண்ட போதும், எதிர்பார்த்தபடி உரிய விலைக்கிடைக்காதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து மூன்று ரூபாய் முதல்  ஐந்து ரூபாய் வரை கொள்முதல் செய்து கொள்வதால்  இதனால் விவசாயிகளுக்கு அறுவடை கூலிக் கூட கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஆகையால் தக்காளிக்கு என உரிய விலை நிர்ணையம் செய்து விலைவீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ