அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பால் இறக்குமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து நடத்தப்பட உள்ள கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு. !

கிருஷ்ணகிரி

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பால் இறக்குமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து நடத்தப்பட உள்ள கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு. !

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பால் இறக்குமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து நடத்தப்பட உள்ள கண்டன ஆர்பாட்டத்திற்கு விவசாயிகள் கலந்துக் கொள்ள வேண்டும் மாநில தலைவர் இராமகவுண்டர் அழைப்பு.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில்....

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக பால் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. மேலும் அமெரிக்கா நேரடியாக இந்தியாவில் பால் இறக்குமதி செய்தால் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஓட்டு மொத்தமாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வருகின்ற 19- தேதி வியாழக்கிழமையன்று காலை 11 மணி அளவில் கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியம் முன்பாக நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பால் இறக்குமதியை உடனடியாக ரத்து செய்ய,  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள முன்வர வேண்டும் என்று தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் 

மாருதி மனோ