வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சரவணன் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தேமுதிக கட்சி பிரேமலதா விஜய்காந்திடம் விருப்ப மனுவினை அளித்தார். !

கிருஷ்ணகிரி

வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சரவணன் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தேமுதிக கட்சி பிரேமலதா விஜய்காந்திடம் விருப்ப மனுவினை அளித்தார். !

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சரவணன் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தனது விருப்ப மனுவினை பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவினை கட்சி தலைமையிடம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் தேமுதிக - வினர் ஆர்வத்துடன் விருப்ப மனுவினைக் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான தேமுதிக கட்சியினர் தங்களது விருப்ப மனுவினை கொடுத்து வருகின்றர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக கட்சியை சேர்ந்தவர்களும் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனுவினைக் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சரவணன் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் தனது விருப்ப மனுவினை வழங்கினார்.
 
அப்போது தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் எல்.கே சுதீஷ், மாநில கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சின்ராஜ், ஓன்றிய செயலாளர் வேட்டியம்பட்டி முருகன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ