கிருஷ்ணகிரியில் கம்பன் கழகம் சார்பில்  10 ஆம் ஆண்டு கம்பன் விழா நடைபெற்றது,!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கம்பன் கழகம் சார்பில்  10 ஆம் ஆண்டு கம்பன் விழா நடைபெற்றது,!

கிருஷ்ணகிரியில் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற 10 ஆம் ஆண்டு கம்பன் விழாவில் சிறப்பாக சமுகப் பணியாற்றிய 250 பேருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் கம்பன் கழகம் சார்பில் 
10 ஆம் ஆண்டு கம்பன் விழா நடைபெற்றது,

கம்பன் விழாவினை முன்னிட்டு நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறுப் போட்டிகளும் நடைபெற்றது.

கம்பன் கழகத்தின் நிறுவனர் ரவிந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, செயலாளர் பன்னீர்செல்வம்  திட்ட துணைத் தலைவர்கள் பாலாஜி, விஜயகுமார், சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக துணை செயலாளர்களான பாலமுருகன், சிவக்குமார், சீனிவாசன், துணைத் தலைவர் தங்கவேல், இணை செயலாளர் முருகன் ஏலகிரி பாரதி தமிழ்சங்க தலைவர் சிவராஜி, அதியமான் கல்வி நிறுவன நிறுவனர் திருமால் முருகன் சிறப்புரையும், தமிழ்த்துறைத் தலைவர் பழனிவேலு, வாணியம்பாடி உமாசங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு விழாவினை குத்து விளக்குஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும் இந்த விழாவின் போது கருமலை வள்ளலார், கல்வியாளர், மருத்துவ செம்மல், சொல்லின் செல்வர், சேவை செம்மல், கருமலை செம்மல், சேவை மங்கை விருது என, அந்தந்த துறையில் சிறப்பாக பணியாற்றிய 250 பேருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் முதலிடம் பிடித்த 100 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிழ் மற்றும் நினைவு பரிசுகளை பாரத் கல்வி நிறுவனர் மணி, காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், டாக்டர் இஸ்மாயில் மாலிக், ஆரியபவன் ஓட்டல் நிறுவனர் நாகராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்கள்,

மேலும் இந்த விழாவில் செயலாளர் அருள், பொருளாளர் ஸ்ரீரங்கன், ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ