பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கிருஷ்ணகிரி வருகை

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கிருஷ்ணகிரி வருகை

கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப்போது அமைச்சர் டாக்டர் சந்திரமோகனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் எல்.முருகன்.

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணை அமைச்சராக  இருக்கும் எல்.முருகன் அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக  கிருஷ்ணகிரி அருகே உள்ள கெங்கலேரி கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுரேகா நாகேந்திரனின் புது மனை புகு விழாவில் கலந்து கொண்டார். 

இந்த விழாவில் சமூக நுகர் பாதுகாப்பு நலச் சங்கத்தின்  மாநில பொதுச் செயலாளரும் தேசிய மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவருமான டாக்டர் சந்திரமோகன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அப்போது வருகின்ற 29-நுகர்வோர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாறு அழைப்பிதழ் வழங்கினார். அப்போது அழைப்புகளை பெற்ற அமைச்சர் டாக்டர் சந்திர மோகனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து கிருஷ்ணகிரி குகை காளியம்மன் திருக்கோயில் தவத்திரு முருகன் சுவாமிகள் கலந்துக்கொண்டு மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கு கோயில் பிரசாதங்களை வழங்கியும் மரியாதை செய்தார்.

இந்த விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சிவபிரகாசம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், மற்றும் பாரத ஜனதா கட்சியை சேர்ந்த திருப்பதி கவுண்டர், கோடீஸ்வரன், நகராட்சி கவுன்சிலர் சங்கர், நுகர்வோர் சங்க செய்தி தொடர்பாளர் ஜெய்சன், ராம் குகை காளி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

மாருதி மனோ