இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..!
கிருஷ்ணகிரி
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டிணம் கிளை, அரவிந்த் கண் மருத்துவமனை கோயமுத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கிளை செயலாளர் நா.செந்தில்குமார், காவேரிப்பட்டணம் துணை கிளை செயலாளர், து.சண்முகம் , செ.சேஷகிரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் அஷிதா தலைமையிலான மருத்துவ குழுவினர், முகாமில் கலந்து கொண்ட 250 க்கும் மேற்பட்ட பொதுமக்களை பரிசோதனை செய்து கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை கோயம்புத்தூர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
