சிறுபானமையினர் தினத்தினை முன்னிட்டு எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் சார்பில் அன்னை தெரசா தொழு நோயாளிகள் காப்பகத்தில் முப்பெரும் விழா .!

கிருஷ்ணகிரி

சிறுபானமையினர் தினத்தினை முன்னிட்டு எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் சார்பில் அன்னை தெரசா தொழு நோயாளிகள் காப்பகத்தில் முப்பெரும் விழா .!

சிறுபானமையினர் தினத்தினை முன்னிட்டு எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் சார்பில் அன்னை தெரசா தொழு நோயாளிகள் காப்பகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  பர்கூர் வட்டம் மகாத்மா காந்தி நகரில் செயல்படும் அன்னை தெரசா தொழுநோயாளிகள்  காப்பகத்தில் கேப்பேபிள் பவுண்டேசன் டிரஸ்ட், கல்வாரி பவுண்டேசன் டிரஸ்ட் மற்றும் பிரகாசி மிஷனரி பேராயத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

அகில இந்திய பொதுச்செயலாளரும் முதன்மை பேராயர் கேப்பேபிள் பவுண்டேசன் டிரஸ்ட் தலைமை நிர்வாகியான டாக்டர் டேனியல்சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எழும்பி பிரகாசி பேராயத்தின் மாநில துணை செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மற்றும் கல்வாரி பவுண்டேசன் டிரஸ்ட் தலைமை நிர்வாகி ஜேசுதாஸ், எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் நிறுவனர் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங் ஆகியோர் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளாக  கலந்துக் கொண்டனர்.

சிறுபான்மையினர் உரிமை தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் அன்னை தெரசா தொழுநோயாளிகள்  காப்பகத்தில் உள்ள தொழு நோயாளிகள் அனைவருக்கும் மருந்து மாத்திரைகள், புரோட்டின் பவுடர்கள், விட்டமீன் மாத்திரைகள், பஞ்சு கட்டு கட்ட பேண்டேஜ் துணிகள், சத்து டானிக் மற்றும் மதிய உணவு வழங்கி சிறுபான்மையினர் தினம் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது.

மேலும் இவ்விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் முதன்மை பேராயத்தின் தலைமை டாக்டர் டேனியல் சக்கரவர்த்தி, எழும்பி பிரகாசி பேராயத்தின் மாநில துணை செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மற்றும் கல்வாரி பவுன்டேசன் டிரஸ்ட் தலைமை நிர்வாகியுமான டாக்டர் ஜேசுதாஸ், சென்னை மண்டல பேராயர் டாக்டர் மார்ட்டின் மாதவன், டாக்டர் எஸ்தர் ஈஸ்வரி, டாக்டர் புகழேந்தி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மற்றும் கிருஷ்ணகிரி எஸ்தர் ஜெபக்குழு பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ