காங்கிரஸ் தியாகியின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறித்து, ஊரை விட்டு தள்ளி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தி வலியுறுத்தி எம்.எல்.ஏ.மதியழகன் மனு. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள மோரனஹள்ளி கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட இடம் கொடுத்த காங்கிரஸ் தியாகியின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறித்து, ஊரை விட்டு தள்ளி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்களுடன் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகனிடம் புகார் மனுக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்ட்டினம் அருகே உள்ள மோரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். காங்கிரஸ் தியாகியான இவர் தன்னுடைய நிலத்தினை பள்ளிக்கூடம் கட்டுவதற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்துள்ளார். இதற்கு மாற்று இடமாக வேறு இடத்தில் 6 ஏக்கர் தரிசு நிலத்தை அரசு சார்பில் ஜெகதீசனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் அவரது குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மோரன ஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் இந்த நிலத்தினை தொடர்ந்து அனுபவித்து வருகின்றீர்கள் அதற்காக ஊருக்கு நீங்கள் ரூ 3 லட்சம் அபராதம் கட்டப்பட வேண்டும் இல்லையில் ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவேம் என ஊர் பஞ்சாயத்தில் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது, பின்னர் ஊர் கட்டுப்பாட்டினை மதித்து ரூ. 3 லட்சம் பணம் கொடுத்து உள்ளனர்.
இதனையடுத்து அரசு கொடுத்த இடத்தில் விவசாயப் பணிகள் செய்த போது, இனிமேல் இந்த நிலத்தில் எந்த விவசாயமும் செய்யக்கூடாது உங்களை ஊரை விட்டு தள்ளி வைத்து விட்டோம். இனிமேல் நீங்கள் கிராமத்தில் நடக்கும் திருவிழா போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளக்கூடாது என மிரட்டி ஊரை விட்டு தள்ளி வைத்து உள்ளனர்.
இதனால் ஜெகதீசன் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இன்னக்களுக்கு ஆளாகியதோடு மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன விரக்தியுடன் காணப்பட்டனர்.
இதனையடுத்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் காங்கிரஸ் தியாகி ஜெகதீசன் குடும்பத்துடன் பர்கூர் திமுக சட்ட மன்ற உறுப்பினர் மதியழகனை சந்தித்து கட்ட பஞ்சாயத்து மூலம் மிரட்டி ரூ 3 லட்சம் பணம் பறித்ததோடு ஊரை விட்டு தள்ளி வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி புகார் மனுவினைக் கொடுத்தனர். இது தொடர்பாக ஊரை விட்டு தள்ளி வைப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இது குறித்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் மோரனஹள்ளி கிராமத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிலம் கொடுத்த காங்கிரஸ் தியாகி ஜெகதீசன் குடும்பத்தினரை மிரட்டி
மணம் பறித்ததோடு ஊரை விட்டு தள்ளி வைப்பது மிகவும் கண்டிக்க தக்கது ஊரை விட்டு தள்ளி வைத்த நபர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டார்.
அப்போது சமூக நுகர்வு அமைப்பை சேர்ந்த ஜெய்சன், பொன்னையன்
ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ