தினசரி சந்தை வியாபாரிகள் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டம் .!
தென்காசி

தென்காசியில் தினசரி சந்தை வியாபாரிகள் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டம்
தென்காசி அக் 07
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறிகள் சந்தை வியாபாரிகள் நகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள புதிய கடைகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய கோரி காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் தங்களது காய்கறிகளை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பாண்டியன் பொருளாளர் நாராயணன் துணைத்தலைவர் சுடலைக்கனி துணைச் செயலாளர் தாவூத் மைதீன் துணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது, தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட தென்காசி தினசரி காய்கறி சந்தையில் வியாபாரிகள் சுமார் 40 வருட காலமாக தினசரி குத்தகை செலுத்தி 120 கடைகளை நடத்தி வியாபாரம் செய்து வருகின்றோம்.
பழைய மார்க்கெட் கடைகளை இடித்து புதிய மார்க்கெட் கட்டும் பணிகளுக்காக ஆணை வெளியிடப்பட்டது.
எங்களுடைய வியாபாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் வணிகம் செய்வதற்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக அருகில் உள்ள தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா வளாகத்தில் 100 கடைகளை அமைத்து தொடர்ந்து வியாபாரம் செய்து வர ஏற்பாடு செய்து தந்தார்கள்.தற்போது தென்காசி நகராட்சியில் இருந்து புதிய மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு என்ற நோட்டீஸ் பத்திரிக்கை செய்தித்தாளில் வெளியிடப்
பட்டுள்ளது.
இதனால் சிறு வியாபாரிகளாகிய எங்களுக்கு பெரும் கஷ்ட நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிப்படையும் இதனால் சிறு வியாபாரிகள் ஆகிய நாங்கள் வேறு வழியின்றி பொது ஏலம் ரத்து செய்யும் வரை எங்கள் கடைகளை இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.
இந்த கடையடைப்பு நிகழ்ச்சியின் போது தினசரி சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வந்த விவசாயிகள் தங்கள் காய்கறிகளை சாலையில் கொட்டி கண்ணீர் மல்க கோஷமிட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் முருகேசன், பொண்ணுக்குளி கோமதிநாயகம் முப்புடாதி கனி முருகன் மாரிமுத்து குமார் அருணாசலம் வேல்முருகன் ராமகிருஷ்ணன் ராமசாமி சாகுல் ஹமீது முகமது சுபஹானி திவான் மீரா பிள்ளை உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்