காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா .!

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா .!

காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில்  தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில்,  கிருட்டினகிரி ஒருங்கிணைந்த திமுக  மேனாள் மாவட்டச் செயலாளர்  தி.செங்குட்டுவன் அவர்கள் கலந்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார். 

நிகழ்ச்சியில் திராவிடர் கழகம், திமுக, விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), மக்கள் அதிகார கழகம் உள்ளபட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் தோழர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ