கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2025 - 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை .!

கிருஷ்ணகிரி

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2025 - 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை .!

கிருஷ்ணகிரி கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2025 - 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் அவர்கள் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

மேலும் தீபாவளி 2025 பண்டிகைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 விற்பனை நிலையங்களுக்கு ரூ.1 கோடியே 78 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ