கிருஷ்ணகிரி ஔவை தமிழ் மன்றம் சார்பாக ஔவை திருநாள்.!
கிருஷ்ணகிரி
இன்று 17.01.2025 கிருஷ்ணகிரி ஔவை தமிழ் மன்றம் சார்பாக ஔவை திருநாள் பழையபேட்டை கவீஸ்வரர் மலை அடிவாரத்தில் ஔவை குன்று அருகில் இன்று கொண்டாடப்பட்டது.
தமிழ் ஆன்றோர்கள் ஔவை மன்றச் செயலாளர் தகடூர் தமிழ்க் கதிர், விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்த வாசகர் வட்டத் தலைவர் கமலேசன், கம்பன் கழகத்தலைவர் இ.ரவீந்திரன், பொருளாளர் ஸ்ரீரங்கன், கவிஞர்கள் கவிமாமணி கலைச்செல்வி, பத்மாவதி, நரசிம்மன் ஆகியோர் சிறப்புரை கவிதைகள் வழங்கினர். தமிழ்ச்சான்றோர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்வு முடிவில் கம்பன் கழகம் பொருளாளர் ஸ்ரீரங்கன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
