திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திமுக சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன்.!

கிருஷ்ணகிரி

திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திமுக சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன்.!

பூந்தோட்டத்தில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திமுக சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் பொதுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக ஆட்சி செய்து வரும் தமிழக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பூந்தோட்டத்தில் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் நகர 11-வது வார்டு சார்பில் மாபெரும் சமுத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற இந்த சமத்துவ விழாவில் விளையாட்டு போட்டிகள், மற்றும் நடன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பர்கூர் சட்ட மன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மதியழகன் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது திராவிட பொங்கல் விழாவில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும், தமிழக அரசு தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி தமிழகத்தினை முன்னோடி மாநிலமாக உருவாக்கி உள்ள தமிழக அரசுக்கு என்றும் நீங்கள் உறுத்துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நகர திமுக பொறுப்பாளர்களான அஸ்லாம், வேல்மணி மற்றும் திமுகவை சேர்ந்த தர்மன், அல்லி முத்து,
குழந்தை அப்பன், வசந்த், அர்ஜுன், பிரேம் குமார், கோவிந்தராஜ், பாரி, நிஷாந்த், புனிதா, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர். மேலும் இந்த விழாவின் பல்வேறு மற்று கட்சியில் இருந்து விலகிய 25 பேர் திமுக சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ