இரட்டை கொலை செய்த மூவரை தேடிப்பிடித்து சிறையிலடைத்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.!

கிருஷ்ணகிரி

இரட்டை கொலை செய்த மூவரை தேடிப்பிடித்து சிறையிலடைத்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.!

கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பாஞ்சாலியூர் கிராமம், யாசின் நகரில் கடந்த 26.09.2025-ம் தேதி அன்று மதியம் அடையாளம் தெரியாத நபர்களால் 1) எல்லம்மாள்(48) க/பெ (லேட்) சுரேஷ், யாசின் நகர் மற்றும் அவரது மகள் சிறுமி 2) சுசிதா (12) த/பெ (லேட்) சுரேஷ் ஆகியோர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். 

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எதிரிகளை கண்டுபிடிக்க வேண்டி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி..தங்கதுரை உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர் மற்றும் நமசிவாயம் ஆகியோரின் மேற்பார்வையில்,  

கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் C.முரளி மற்றும் தேன்கனிகோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று 29.09.2025-ம் தேதி காவேரிப்பட்டிணம் அண்ணா நகரில் இருந்த 1) நவீன்குமார் (23) த/பெ கணபதி, குரும்பட்டி மோட்டூர் கிராமம், காவேரிப்பட்டிணம், 2) சத்தியரசு (24) த/பெ முருகேசன், குரும்பட்டி மோட்டூர் கிராமம், காவேரிப்பட்டிணம், 3) 17 வயது சிறார் ஆகியோர்களை  கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில்,

சத்தியரசு என்பவர் மேற்படி எல்லம்மாள் என்பவரிடமிருந்து ரூபாய் 10,000/- வட்டிக்கு பணம் வாங்கியதும், பின்பு அதை கட்ட முடியாததால் எல்லம்மாளுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு, விரோதமாக மாறியுள்ளது.

முன்விரோதத்தின் காரணமாகவும், எல்லாமாளிடம் அதிகப்படியான நகை மற்றும் பணம் இருப்பது தெரிந்து கொண்டும், அதை கொள்ளையடிக்கும் நோக்கத்திலும் மூன்று பேர் திட்டமிட்டு எல்லம்மாளை கொலை செய்துள்ளனர். 

கொலை செய்யும் போது, சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த எல்லம்மாளின் மகள் சுசிதாவையும் கொலை செய்துவிட்டு எல்லம்மாள் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  

மேற்படி குற்றவாளிகளிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 10 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

செய்தியாளர்

மாருதி மனோ