கட்டிக்கான பள்ளி பஞ்சாயத்தின் செயல்பாடுகள், வரவு, செலவுகள் பஞ்சாயத்து செயலாளர் ஜெயக்குமாரால் வாசிக்கப்பட்டது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி, கிராம சபாவில், கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து பொதுமக்கள், வட்டார அலுவலர், பஞ்சாயத்தின் செயலர், பள்ளி கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு, குழந்தைகள் பாதுகாப்பு மையம், அங்கன்வாடி, சுகாதாரத்துறை, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர், என கலந்து கொண்டதில், கட்டிக்கான பள்ளி பஞ்சாயத்தின் செயல்பாடுகள், வரவு, செலவுகள் பஞ்சாயத்து செயலாளர் ஜெயக்குமாரால் வாசிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட பிரச்சார குழு ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் பவுன்ராஜ் மற்றும் சேலம் மண்டல பொறுப்பு மற்றும் ஒருங்கிணைப்பாளர் இணைந்து கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்தில் 26 ஜனவரி 2026 கிராமசபை "என் ஓட்டு விற்பனைக்கு அல்ல" மற்றும் தேர்தல் பிரச்சாரமாக, கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்தின் குடியிருப்புவாசியும், நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஏஜி. ஜாய் பேசுகையில், 2026 ஜனவரி 26 அன்று நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் தீர்மானமாக " என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் படி தீர்மானம் நிறைவேற்றிடவும் , ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் பெறுவதும் சட்டப்படி குற்றமாகும். மாவட்ட ஆட்சியிரின் மனு நாளிலும் கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுக்கு பணம் பெறுவது, கொடுப்பது, தேர்தல் செயல்முறைகளைத் தாண்டி, ஜனநாயக அமைப்பை அழிக்கும் செயலாகக் கருதப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 171B, தேர்தல்களுடன் தொடர்பான லஞ்சம் (Bribery) என்பதை வரையறுக்கிறது. இதன் படி, ஓட்டுரிமையைப் பயன்படுத்த (வாக்களிக்க அல்லது வாக்களிக்காமல் இருக்க) ஊக்குவிக்க அல்லது வெகுமதியாக ஏதேனும் பரிசு (gratifcation - பணம், பொருள் போன்றவை) கொடுப்பவர் அல்லது பெறுபவர் லஞ்சக் குற்றத்தைச் செய்கிறார்கள். தண்டனைIPC பிரிவு 171E படி, இந்தக் குற்றத்திற்கு 1 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். கொடுப்பவரும் பெறுபவரும் இருவரும் சமமாகக் குற்றவாளிகள்.
தேர்தல் சட்டம் மக்களாட்சி பிரதிநிதித்துவச் சட்டம்- 1951 (RP Act) பிரிவு 123(1) இதை "corrupt practice" என வகைப்படுத்துகிறது; இதனால் வேட்பாளரின் தேர்தல் செல்லாது ஆகலாம். தேர்தல் ஆணையம் வழக்குகளைப் பதிவு செய்யும் வழிவக செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வை தீர்மானமாக நிறைவேற்றி அனைத்து பொது மக்களும் விழிப்பாக, விழிப்புணர்வுடன் வாக்களிக்கவும், அனைவரும் வாக்களித்து சிறப்பான தேர்தல் அணுகுமுறையாக மாற்றிட தீர்மானம் நிறைவேற்றி அமல் படுத்திட வேண்டும் என பேசினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரக் குழுவில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
