அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம். !

கிருஷ்ணகிரி

அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம். !

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ஆம் தேதிகள்) ஆகிய மூன்று நாட்கள் தங்களது வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, திங்கள் (10, 11, 12, 13, 16) ஆகிய ஐந்து நாட்களும் பணிகளைப் புறக்கணித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு வடிவங்களில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் தங்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கல்லூரி அளவிலான பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு முனைவர் ம. பழனி தலைமைத் தாங்கினார். முனைவர் த.  அன்பழகன் முனைவர் சுவாமிநாதன் செல்வி ஆனந்தி முனைவர் மனோன்மணி  முனைவர் அருணா முனைவர் பாமினி முனைவர் உமாமகேஸ்வரி முனைவர் வரலட்சுமி முனைவர் தனலட்சுமி முனைவர் சண்முக சுந்தரம் முனைவர் சித்திக் ராஜா முனைவர் சுரேஷ் முனைவர் சிவக்குமார் முனைவர் காமராஜ் திரு வெங்கடேசன் முனைவர் சரண்ராஜ் முனைவர் அசோக்குமார் முனைவர் பமீலா திருமதி சாந்தி பிரபாவதி கிருஷ்ணவேணி திருமதி கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்து வந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ