காட்டி நாயனப்பள்ளி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.!

கிருஷ்ணகிரி

காட்டி நாயனப்பள்ளி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.!

காட்டி நாயனப்பள்ளி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்தினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் காட்டிநாயனப்பள்ளியில் மினி டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின் வினியோகம் வழங்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மினி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மதியழகன் கலந்து கொண்டு சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின் மாற்றி டிரான்ஸ்பார்மரை மக்கள் பயன்பட்டிற்காக துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். அப்போது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்களுக்கு தங்களது நன்றியினை  தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இந்த விழாவின் போது ஒன்றிய செயலாளர் நாராயணன், திமுக ஒன்றிய நிர்வாகி ராமச்சந்திரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் அஸ்லாம் ரகுமான் செரிப், வேலுமணி, ஆனந்தன். பாண்டுங்கன், வேலாயுதன், மாணிக்கம், மின்வாரிய உதவி இயக்குனர் சிதம்பரம், உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், மின்வாரிய ஆய்வாளர் ராஜேந்திரன், ஃபோர்மேன் வெங்கடேஷ், லைன்மேன் சேகர், சிவன், கேங்மேன் நவீன், பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ