எலத்தகிரி கிராமத்தில் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் வழுக்கு மரம் ஏறும் போட்டி.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே பாரம்பரிய கிராம விளையாட்டுகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் எலத்தகிரி கிராமத்தில் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது, இதில் 20 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றதில் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு எட்வின் என்ற இளைஞர் பரிசுத் தொகையை தட்டி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை கிராமங்கள் தோறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் இன்னும் பழமையை மறவாமல் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரி கிராமத்தில் பொங்கல் திருவிழா வெகு விமர்ச்சியாக மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு இடையிலான கிராம விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது
இந்த விளையாட்டுப் போட்டியில் சிறுவர் சிறுமிகளுக்கு இடையே தவளை ஓட்டம், பாட்டில் தண்ணீர் நிரப்புதல், சாக்கு பையில் ஒட்டமும், குளமா கரையா, கபடி, லெமன் ஸ்பூன் போட்டி, ஓட்டப் பந்தயம், பெண்களுக்கு இடையே கயிறு இழுத்தல், இசை நாற்காலிப் போட்டி, கோலப் போட்டி
உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இளைஞர்களுக்கு இடையிலான வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட வாலிப இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு வழுக்கு மரத்தில் கட்டப்பட்டு இருந்த பரிசினை எடுக்க போட்டி போட்டு ஏறினார்கள். ஆனால் வழுக்கு மரத்தில் ஏறமுடியாமல் தவித்தனர்.
தொடர்ந்து 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, எலத்தகிரி கிராமத்தை சேர்ந்த எட்வின் என்ற இளைஞர் வழுக்கு மரத்தில் ஏறி வழுக்கு மரத்தில் கட்டப்பட்டு இருந்த பரிசு தொகையினை தட்டி சென்று கிராம மக்களின் பாராட்டினை பெற்றார். பின்னர் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட கிராம விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எலத்தகிரி கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

தமிழர்களில் பாரம்பரிய கிராம விளையாட்டுக்களை இளைய தலைமுறையினர்கள் மத்தியில் புத்துயிர் ஊட்டும் வகையில் நடத்தப்பட்ட இந்த விளையாட்டில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
மாருதி மனோ
