தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப் 27 ல் மிதிவண்டி போட்டி .!

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப் 27 ல் மிதிவண்டி போட்டி .!

தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப் 27 ல் மிதிவண்டி போட்டி

மாவட்ட ஆட்சியர் தகவல்

அறிஞர் அண்ணாவின் மிதிவண்டி போட்டி செப்டம்பர் 27ம் தேதி நடத்தப்பட இருப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் 
ஏகே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 27 9 2025 அன்று காலை 6 மணிக்கு அறிஞர் அண்ணா மிதி வண்டி போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும்,
 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இருபது கிலோ மீட்டர் தூரமும், 15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும்,
 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு பதினைந்து கிலோமீட்டர் தூரமும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டியானது 27 9 2025 அன்று காலை 6 மணிக்கு தென்காசி குத்துக்கல் வலசை ஐடி வாழைக்காய் மண்டியிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன் பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 26 9 2025 மாலை ஐந்து முப்பது மணி ஆகும். போட்டியில் பங்குபெறும் அனைவரும் தங்கள் பள்ளியிலிருந்து உறுதிச் சான்றிதழ் போனோபைட் சான்றிதழ் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்படவேண்டும்.

போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாம் பரிசு 3000, மூன்றாம் பரிசு ரூபாய் 2000, நான்காம் பரிசு முதல் பத்தாம் பரிசு வரை ரூபாய் 250, மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

வெற்றி பெறுபவர் களுக்கு பரிசு தொகையானது நெப்ட் மூலம் வழங்கப்பட உள்ளதால் தங்களின் வங்கி கணக்கு முதல் பக்க நகலை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். முன் பதிவு செய்திட மற்றும் மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்டம் பாட்டா குறிச்சியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தை நேரிலோ அல்லது 04633-212580 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்