துப்புரவு பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் தனது சொந்த செலவில் கட்டிக்கான பள்ளி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
இந்நிகழ்வில் தூய்மைப்பணியாளர்களுக்கு புடவை, ஹாட் பாக்ஸ் மற்றும் இனிப்பு ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்களின் சார்பில் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தனசேகரன், கிருஷ்ணகிரி மேற்கு நகர கழக செயலாளர் என்.அஸ்லம், கிழக்கு நகர கழக செயலாளர் எம்.வேலுமணி மற்றும் கட்டிக்கான பள்ளி ஊராட்சி சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ