ஊராட்சிக்கு சொந்தமான வருவாய் தரும் மரங்களின் குத்தகை பணத்தை ஊராட்சி நிதிக்கு ஒப்படைக்க கோரி கிராம மக்கள் கோரிக்கை.!

கிருஷ்ணகிரி

ஊராட்சிக்கு சொந்தமான வருவாய் தரும் மரங்களின் குத்தகை பணத்தை ஊராட்சி நிதிக்கு ஒப்படைக்க கோரி கிராம மக்கள் கோரிக்கை.!

புளியம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான வருவாய் தரும் மரங்களின் குத்தகை பணத்தை ஊராட்சி நிதிக்கு ஒப்படைக்க கோரி கிராம மக்கள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் உள்ள திப்பனூர் ஏரிக்கரையோரம் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சிக்கு நிதி வருவாயை பெருக்கும் வகையில் கிராம மக்கள் தென்னை மரம், நாவல்மரம்,புளிய மரம்  உள்ளிட்ட பல்வேறு மரங்களை நடவு செய்ததின் காரணமாக தற்போது பலன் தர துவங்கி உள்ளது. இந்நிலையில் பலன் தரும் இம்மரங்களை புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர்கவுண்டர் குத்தகைக்கு விட்டு அந்த பணத்தை புளியம்பட்டி கிராமத்திற்கு  எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களின் குத்தகை பணத்தை ஊராட்சி நிதியில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில் புகார் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் புளியம்பட்டி ஊராட்சி செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது  ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள வருவாய் தரும் மரங்களின் குத்தகை பணத்தை புளியம்பட்டி ஊர் நிதிக்கு எடுத்துக்கொண்டது தவறான செயலாகும். இதுகுறித்து ஊர் கவுண்டரிடம் கேட்டபோது.....

அரசு கட்டிடங்கள் மற்றும் மரங்கள் இருக்கும் பகுதியானது தனி நபர்களின் பட்டா நிலத்தில் உள்ளதாகவும், அதனால் குத்தகை நிதி ஊர் நிதியில் சேர்க்கப்படும் என தெரிவித்தார். அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் எப்படி தனிநபர் பட்டாவில் இருக்கும் என அதிகாரிகளிடம் கேள்வி கேட்டபோது அவர்கள் பதில் அளிக்கவில்லை. 

மாவட்ட நிர்வாகம், தவறுதலாக தனி நபர்களின் பெயர்களில் உள்ள பட்டாவை ஆய்வு செய்து அரசு பெயருக்கு மாற்ற வேண்டுமெனவும், குத்தகை நிதியினை ஊராட்சி கணக்கில் வைக்க வேண்டும் இல்லையேல் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று  தெரிவித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ