கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாதாந்திர எரிவாயு உருளை குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாதாந்திர எரிவாயு உருளை குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர் திருமதி கீதா ராணி தலைமை ஏற்றார். நேர்முக உதவியாளர் மோகன் மற்றும் இண்டேன் மண்டல மேலாளர் ரைடன் காஸ்டினோ முன்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட எரிவாயு உருளை முகவர் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொண்டனர்.

இதில் நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஏஜி.ஜாய் அவர்கள் பேசுகையில்....
கிருஷ்ணகிரி மாவட்ட எரிவாயு உருளை விநியோகம் செய்யக்கூடிய முகவர்கள் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு சோதனையாக எரிவாயு அடுப்பு, குழாய்,ரெகுலேட்டர், பர்னல் போன்றவற்றை ஐஎஸ்ஐ(ISI) கொண்ட முத்திரை கொண்ட, தரமான பொருளை கொண்டு வணிகம் மேற்கொள்கின்றனர்.
ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு எரிவாயு உருளை அடுப்பு உதிரி பாகங்கள் கடைகளில், போலியான, அதாவது தரம் இல்லாத ஐஎஸ்ஐ (ISI) முத்திரை இல்லாத ரெகுலேட்டர், எரிவாயு குழாய், பர்னல் போன்ற உதிரி பாகங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியும், அவற்றை பறிமுதல் செய்யவும், மேலும் குறிப்பிட்ட வணிகர்களுக்கு அபராதமும், தொடர்ச்சியாக இதே போல் செயலில் ஈடுபடக் கூடிய வணிகங்களுக்கு தண்டனையும், குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு உருளை பயன்படுத்துக்கூடிய வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அவற்றை பறிமுதல் செய்யவும், தொடர்ச்சியாக ஈடுபடும் வணிகர்கள் மீது குற்ற வழக்கும் தண்டனையும், வழங்க சட்டநடவடிக்கை மேற்கொள்ளவும், இவை நுகர்வோர் பயன்பாட்டில் நெருக்கடியை உண்டு பண்ணுகிறது எனவும் ,மேலும் வணிக பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யக்கூடிய உருளையானது மோசடியாக விற்பனை செய்து நடைமுறையில் உள்ளதை சுட்டிக்காட்டி, குடிமைப் பொருள் காவலர்களுக்கும், பறக்கும் படை அலுவலர்களுக்கும், உத்தரவு பிறப்பிக்குமாறு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்திடவும், கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ச்சியாக, நுகர்வோர் பிரதிநிதிகள் ஏற்கனவே, வழக்கத்தில் இருக்கக்கூடிய இருசக்கர வாகனங்களின் பயன்பாடு, சீருடை ,எடை கருவி மற்றும் காலாவதியான எரிவாயு உருளைகளை அவற்றை கவனத்துடன் கையாளவும், மேற்கண்ட விநியோகர்கள் டெலிவரி செய்யக்கூடிய ஆட்களுக்கு சரியான அடையாள அட்டை போன்றவற்றை வழங்கி, அவற்றை வீடுகளில் விநியோகம் செய்யும் பொழுது கண்டிப்பாக அணிந்து வரவும், மேலும் பிரதான சாலைகளில் இரு சக்கரங்களில் 6-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணித்து டெலிவரி செய்வதை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, எரிவாயு உருளை வினியோக முகவர்களுக்கு அறிவுரையும் மற்றும் பறக்கும் படை வட்டாட்சியர், குடிமை பொருள் காவலர்களுக்கு இவற்றை நடவடிக்கையின் மூலம் மேற்கொண்டு தடுத்திட சட்டநடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
