ஒசூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களை கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.!
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பாக, போச்சம்பள்ளி சிப்காட் மற்றும் ஒசூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப, மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் குழந்தைகளின் தாய்மார்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
உடன் சிப்காட் திட்ட அலுவலர் சிந்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ