மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். !

கிருஷ்ணகிரி

மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். !

கிருஷ்ணகிரியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி
வரவேற்றதோடு கிராமங்களில் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி கட்சியை வலுப்படுத்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவேரிப்பட்டினம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது,

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜாகுமாரவேல், ஜேசுதுரைராஜ், கிருஷ்ணகிரி கிராம கமிட்டி பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, சேலம் மண்டல ரயில்வே குழு உறுப்பினர் ரகமத்துல்லா, நகர தலைவர்  லலித்ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த இணைப்பு விழாவில் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அவர்களின் செயல்பாட்டால் 
காவேரிப்பட்டினம், நரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில்  தங்களை இணைந்துக் கொண்டவர்களை பொன்னாடை போர்த்தி  வரவேற்றதோடு  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை கிராமங்கள் தோறும் தின்னைப் பிரச்சாரம் முலமாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திட முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது மாவட்ட மீனவரணி தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் மாரியப்பன், முன்னாள் ஓ.பி.சி. தலைவர் ஆஜித் பாஷா, நகர துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.