சாம்பல்பட்டியில் சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கர்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் மாநில செயலாளர் ஆறுமுகம் வழங்கினார்.!

கிருஷ்ணகிரி

சாம்பல்பட்டியில் சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கர்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் மாநில செயலாளர் ஆறுமுகம் வழங்கினார்.!

சாம்பல்பட்டியில் சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கர்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் மாநில செயலாளர் ஆறுமுகம் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் ஒன்றிய சாம்பல் பட்டியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிறந்தநாள் விழா காணும் தியாகத் தலைவி முன்னாள் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் மதிப்பிற்குரிய அன்னை சோனியா காந்தி அவர்களின் 79 வது பிறந்தநாள் விழா பல்வேறு நலத்திட்டங்களுடன் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,  சாமல்பட்டி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள் நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு பால், ரொட்டி, பிஸ்கட், இனிப்புகள் வழங்கும் விழா காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவருமான  ஜே எஸ் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் அரசு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் மட்டுமின்றி உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சைகள் பெற்று வருபவர்களுக்கு பழம், பிரட், பால், பிஸ்கட் போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது..

அப்பேது வட்டாரத் தலைவர்களான தனஞ்செயன், தெற்கு வட்டாரத் தலைவர் லோகநாதன், மாவட்ட துணை தலைவர் கேசவன், மாவட்ட செயலாளர் குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, பைவ் ரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத், எஸ்.எஸ்.டி .வட்டார் தலைவர்கள் பாலு சிம்பு, மாரியப்பன், அறிவழகன், தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து காங்கிரஸ் பேரியக்க பொறுப்பாளர்களும் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ