குடிமல்லூர் கிராமஅரசு உயர்நிலை மற்றும் நடுநிலை ஆகிய பள்ளிகளில் நூற்றாண்டு கலை நிகழ்ச்சி

ராணிப்பேட்டை

குடிமல்லூர் கிராமஅரசு உயர்நிலை மற்றும் நடுநிலை ஆகிய பள்ளிகளில் நூற்றாண்டு கலை நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் 

குடிமல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலை மற்றும் நடுநிலை ஆகிய பள்ளிகளில் நூற்றாண்டு கலை நிகழ்ச்சி விழாவில் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து 2024-2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா‌ கோலாகலமாக உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஹேமாவதி வரவேற்புரை வழங்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) விஜயகுமார், தலைமையேற்று வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ், மற்றும் ராமமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இப்பள்ளி 1920-ல் தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு 1980-ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு அதேபோல்  2018-ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு அனைத்து நிலைகளிலும் மாணவர்களின் வருகை பதிவேடுகள் சதவீதம் உள்ளிட்டவற்றில் பள்ளிகள் முதலிடத்தில் உள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தார்கள் இந்த நிலையில் நேற்று பள்ளியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கபடி, ஓவியம், கவிதை, சிலம்பம், கால்பந்து, பாட்டுப்போட்டி உட்பட பல்வேறு திறமை மிக்க விளையாட்டுகள் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது தொடர்ந்து பள்ளியில் முதலாவதாக 5-ஆம் வகுப்பு படிக்கும் சபிதா மற்றும் 4-ஆம் வகுப்பு  படிக்கும் சாரதி ஆகிய இரண்டு பள்ளி சிறுவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் நரிக்குறவர் வேடம் அணிந்து ஆடிய பாடலுக்கு சிறுவர்களும் அவர்களை‌ போலவே தத்ரூபமாக நடனமாடி  அசத்தினார்கள் மேலும் பரதநாட்டியம், நாட்டுப்புற கலை, ஃபோக் டான்ஸ்,  வரலாறு கதைகள் உள்ளிட்ட பல திறமைகளை பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி  காட்டினார்கள் அதேபோல் சிறப்பாக கலை நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய 108 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து 
சான்றிதழ் மற்றும் மெடல் ஆகியவை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து நிகழ்ச்சியில் இறுதியாக ஆசிரியர் ஜாயிஸ் வசந்தகுடி நன்றியுரை ஆற்றினார் இந்த நிகழ்வில்  இரண்டு பள்ளியின் ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஊர் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர்

அருள் அரசன்