11-ஆம் வகுப்பு செய்முறை தேர்வை மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.!

ராணிப்பேட்டை

11-ஆம் வகுப்பு செய்முறை தேர்வை மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.!

ராணிப்பேட்டையில் 11-ஆம் வகுப்பு செய்முறை தேர்வை மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மார்ச் முதல் வாரத்தில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுகான பொதுத்தேர்வுகள் துவங்கி நடைபெற உள்ளது அதற்காக பொதுத்தேர்வுகளுக்கு முன்கூட்டியே செய்முறை தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில்  நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் VRV நிதியுதவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் செய்முறை தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி வருகை தந்து தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..

செய்தியாளர்

அருள் அரசன்

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )