அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை விசு தீர்த்தவாரி நிகழ்ச்சி.!

தென்காசி

அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை விசு தீர்த்தவாரி நிகழ்ச்சி.!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று 10-ஆம் திருநாளை முன்னிட்டு
 காலை மணி 9.20 க்கு மேல் 10.20க்குள் (சித்திரை விசு தீர்த்தவாரி) நிகழ்ச்சி திருக்கோயிலில் நடைபெற்றது, பின்பு கேடயத்தில்  சுவாமி காட்சி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் ஆறுமுகம், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், உறுப்பினர்கள் ஸ்ரீதர், வீரபாண்டியன், சுந்தர்ராஜன், ராமலட்சுமி மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இரவு கேடயத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

செய்தியாளர்

AGM கணேசன் 
.