குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவில் அறங்காவலர் குழு முதல் கூட்டம்.!

தென்காசி

குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவில் அறங்காவலர் குழு முதல் கூட்டம்.!

குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவில் அறங்காவலர் குழு முதல் கூட்டம்

தென்காசி ஏப்ரல் 12

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றால நாத சுவாமி திருக்கோவிலில் அறங்காவலர் குழு கூட்டம் நேற்று குற்றாலம் அன்னதான கூடத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்/ கோயில் செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், உறுப்பினர்கள் ஸ்ரீதர், வீரபாண்டியன், சுந்தர்ராஜன், ராமலட்சுமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதலில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அதேபோல் கோவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

இதன் பிறகு பேசிய அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் கோயில் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நேரடியாக தன்னிடம் தெரிவிக்குமாறும் கோவில் பணியில் அனைவரும்சரியாக இருக்க வேண்டும் என்றும் இக் கோவிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்திட அனைவரும் அப்பளுக்கற்ற முழு ஒத்துழைப்பு தர     வேண்டுமென்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கோவிலில் பணி புரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகள் குறித்து ஒவ்வொருவராக தெரிவித்தனர். அவரது குறைகள் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்ட அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் அனைத்து கோரிக்கைகளும் விசாரணை செய்து விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்நில் குற்றால நாத சுவாமி திருக்கோவில் அலுவலர்கள் கோயில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM. கணேசன்