குற்றாலம் அறங்காவலர் குழு தலைவர் குற்றாலம் கோவில் இடங்களை பார்வையிட்டார்.!
தென்காசி

குற்றாலம் அறங்காவலர் குழு தலைவர் குற்றாலம் கோவில் இடங்களை பார்வையிட்டார்
தென்காசி ஏப்ரல் 21
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திரு குற்றால நாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் குற்றாலம் வாழ் வியாபாரிகள் சங்கம் உறுப்பினர்களிடம் குறை தீர்ப்பு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அருள்மிகு குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பக்தர்களின் வசதிக்காக இலவச கழிப்பறைகளை ஆய்வு செய்து நல்ல முறையில் பராமரிப்பு செய்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன் ராமலட்சுமி வியாபாரிகள் பொதுமக்கள் கோவில் பணியாளர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்