மேலகரம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் .!

தென்காசி

மேலகரம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் .!

மேலகரம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

தென்காசி ஜூலை 4

தென்காசி தெற்கு மாவட்டம் மேலகரம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, மற்றும் திமுக நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேலகரம் பேரூந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் ஏ ஆர் எம் அழகு சுந்தரம், தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா, மேலகரம் பேரூர்  செயலாளர் சுடலை, மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலகரம் பேரூர் கழக துணை செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜீவானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.

தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கலை கதிரவன், கழக பேச்சாளர் நெல்லை ரவி, கழக இளம் பேச்சாளர்கள் புவியரசி, பிரித்வி ராணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, வழக்கறிஞர் வேலுச்சாமி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி கிட்டு என்ற கிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் பண்டாரம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், கார்த்திக், பாலகன், கனிராஜா,ஒன்றிய பிரதிநிதிகள் சுந்தரம் என்ற சேகர், ஈனமுத்து பாண்டியன், யாகவா சுந்தர், வீரபாண்டியன், பாலசுப்பிரமணியன், கபிலன்,அவைத்தலைவர் சலீம், வார்டு செயலாளர்கள் காசி விஸ்வநாதன், வீரபாண்டி, 
குத்தா லிங்கம், கல்யாணசுந்தரம் நன்மை சுந்தர் சந்திரன் கணேஷ் குமார் மனோஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்