இலஞ்சியில் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா.!

தென்காசி

இலஞ்சியில் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா.!

இலஞ்சியில் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மாலை அணிவித்தார்

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூர் திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு இலஞ்சி பேரூர் கழக செயலாளர் முத்தையா ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், இலஞ்சி பேரூராட்சி சேர்மன் சின்னத்தாய் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில்  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா, துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட அயலக அணி தலைவர் செங்கோட்டை நசீர், வழக்கறிஞர் அணி காளிராஜ், கடையநல்லூர் நகர்மன்ற சேர்மன் ஹபீப் ரகுமான், மாவட்ட பிரதிநிதிகள் சுடலையாண்டி மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன் ஒன்றிய பிரதிநிதிகள் இலஞ்சி குமாரகோவில் அறங்காவலர் பூவையா, கணேசமூர்த்தி, தேவி, வார்டு செயலாளர்கள் சிவக்குமார், ராஜ், வசந்தகுமார், செல்லப்பா, ராஜேந்திரன், இசக்கி, காளிராஜ் ரகுபதி பரதன் சின்னத்தாய் கிட்டு பெரியசாமி ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ரவி இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி யோகேஷ் பாலகிருஷ்ணன் சண்முகம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்