குற்றாலத்தில், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட், Rtn அண்ணாமலை பிறந்தநாள் விழா .!
தென்காசி

குற்றாலத்தில், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட், Rtn அண்ணாமலை பிறந்தநாள் விழா
தென்காசி அக் 02
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் அமைந்துள்ள ரோஜா வனம் முதியோர் இல்லத்தில் வைத்து முதியோர்களுடன் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் அண்ணாமலையின் பிறந்தநாள் நிகழ்ச்சி கேக் வெட்டி கொண்டாட பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மணி ரோட்டரி பிரார்த்தனை வாசித்தார். மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக துணை ஆளுநர் மண்டலம்-17 ஸ்டாலின் ஜவகர் கலந்து கொண்டார்.
ரோஜாவனத்தில் உள்ள 50 முதியவர்களுக்கு காலை, மதிய உணவு மற்றும் புத்தாடைகளை Rtn அண்ணாமலை தலைமையில் அனைவரும் வழங்கினர்.
இந் நிகழ்ச்சியில் ரோட்டேரியன்கள் வெங்கடாசலம் என்ற திருப்பதி, மாடசாமி ஜோதிடர், ராம கிருஷ்ணன், மும்பை முருகேசன், மாரிமுத்து,
ஜெகமோகன், தில்லை நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அண்ணாமலை ஏற்புரை வழங்கினார். முடிவில் செயலாளர் ரத்தினவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்