காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் மற்றும் காமராஜர் நினைவு நாளினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் மற்றும் காமராஜர் நினைவு நாளினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் காந்தி ஜெயந்தி திருநாளாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தியடிகளின் முழு திருவுருவ சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர். இதை அடுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதேபோல தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 50 ஆவது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் மாலைகள் அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்கள். மேலும் இதே போல முன்னாள் பாரதப்பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒசூர் மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் தியகராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ