கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு,மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு,மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம். !

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் பொருட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, கணக்கீட்டுக் குழு, கட்டுப்பாட்டு அறைக்குழு மற்றும் உதவி செலவின பார்வையாளர்களுக்கான பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்து உரையாற்றினார்.

உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையர் முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப., தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., ஷாஜகான், திருமதி.கீதாராணி, பழனி, திருமதி.அபிநயா, சிவகுமார், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ