கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் உலகம் உங்கள் கையில் என்னும் மாபெரும் திட்டத்தின் கீழ் மருத்துவம், கலை மற்றும் அறிவியல் தொழில் பயிற்சியில் இறுதியாண்டு பயிலும் 681 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா. !

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பாக கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திக்காக உலகம் உங்கள் கையில் என்னும் மாபெரும் திட்டத்தின் கீழ் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் உலகம் உங்கள் கையில் என்னும் மாபெரும் திட்டத்தின் கீழ் மருத்துவம், கலை மற்றும் அறிவியல் தொழில் பயிற்சியில் இறுதியாண்டு பயிலும் 681 மாணவ மாணவிகளுக்கு   மடிக்கணினிகள் வழங்கும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), தே.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சத்யபாமா, கிருஷ்ணகிரி அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சௌ.கீதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ