மலைச்சந்து கிராமத்தில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் மூங்கில் புதூர் முதல் மிட்டப்பாறை வரை சுமார் 3.5 கி.மீட்டர் தார் சாலை.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம், கங்கலேரி ஊராட்சி, மூங்கில் புதூர் ,தும்பலள்ளி, மலைச்சந்து கிராமத்தில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் மூங்கில் புதூர் முதல் மிட்டப்பாறை வரை சுமார் 3.5 கி.மீட்டர் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழகத் தோழர்கள், என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்
மாருதி மனோ
