கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.!

திமுக கழக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பனப்பள்ளி,நாச்சிகுப்பம், குந்தாரப்பள்ளி x ரோடு ஆகிய இடங்களில் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஏ.எம்.ரகுநாத், டி .எஸ்.கருணாகரன் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, சேர்மன் மாதேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ