கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் செங்கதீர் செல்வம், மாவட்ட பொருளாளர் நமச்சிவாயம் செயற்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தூய்மைக் காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்,
மக்கள் நல பணியாளருக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது கால முறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குவர்களின் பணிக் காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும்,
ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்,
மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்திட அரசாணை 37 வெளியிட்ட பின்னரும் இது நாள் வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆகையால் கணினி உதவியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ
