விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆயுதபூஜையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் பங்கேற்பு.!

கிருஷ்ணகிரி

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆயுதபூஜையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் பங்கேற்பு.!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆயுதபூஜையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் பங்கேற்பு.

கிருஷ்ணகிரியில் அமைத்துள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மேலும் இந்த விழாவின் போது நாடு வளம்பெற வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,

இந்த சிறப்பு பூஜையில் மாநில தலைவர் இராமகவுண்டர் சிறப்பு பூஜைகள் செய்து அனைத்து விவசாயிகளுக்கும் சுண்டல், பொரிக்கடலை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

அப்போது தமிழக விவசாயிகள் சங்கத்தினை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ