கிருஷ்ணகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி 4 ல் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜஹான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராமஜெயம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
