தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் BLA 2 மற்றும் BDA பயிற்சி கூட்டம்.!
தென்காசி
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் BLA 2 மற்றும் BDA பயிற்சி கூட்டம்
சட்டதுறை இணை செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்பு
தென்காசி நவ 03
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட BLA 2 மற்றும் BDA பயிற்சி கூட்டம் தென்காசி ஜெகநாத் அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன் முன்னிலை
வகித்தார்.


தென்காசி நகர திமுக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான சாதிர் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில சட்டதுறை இணை செயலாளர் ரவிசந்திரன்,மற்றும் ராஜா முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு SiR பற்றிய முழு விளக்கங்களை எடுத்து கூறினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்களுக்கு 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக மாவட்ட திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் சட்டதுறை இணை செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் டேப் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் மருத்துவர் கலை கதிரவன், பொதுகுழு உறுப்பினர் அருள், நகர செயலாளர்கள் தென்காசி சாதிர், சுரண்டை கணேசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ரவிசங்கர், ரமேஷ், சீனித்துரை, அழகுசுந்தரம், ஜெயா பேரூர் செயலாளர்கள் குற்றாலம் சங்கர் என்ற குட்டி, மேலகரம் சுடலை, இலஞ்சி முத்தையா, சுந்தரபாண்டியபுரம் பண்டாரம், உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், திமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
