அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்தவர்கள் வீரர்கள் " வராதவர்கள் பயந்தா கொள்ளிகள் என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம். !

சென்னை

அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்தவர்கள் வீரர்கள் " வராதவர்கள் பயந்தா கொள்ளிகள் என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம். !

பாஜகவுக்கு பயந்துக் கொண்டவர்கள் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு வரவில்லை, ஆனால் வீரர்கள் வந்தார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வராதவர்கள் கோழைகள்.

இந்த கூட்டத்திற்கு நிறைய பேர் வந்தார்கள். அப்படியிருக்கும் போது வராதவர்கள் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்? வந்தவர்கள் பெருந்தன்மையோடு வந்திருக்கிறார்கள், வரவேற்கிறோம். ஜனநாயக உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

மற்ற கட்சியினர் ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக பயந்து கொண்டு வரவில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பயந்தாங்கொள்ளிகள் வரவில்லை, வீரர்கள் வந்தார்கள்.

எஸ்ஐஆர் மட்டுமில்லை என்ஆர்சியும் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சதி! நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழலில் அவசரமாக எஸ்ஐஆரை அமல்படுத்துவது ஏன்? இதையும் நம் வழக்கறிஞர்கள் வழக்கின் போது கேள்வி கேட்பார்கள். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.