சென்னையில் போலீசாரை தாக்கியவர்கள் திமுக - வினர் என அண்ணாமலை கூறிய நிலையில் காவல்துறை மறுப்பு.! தாக்கியவர்கள் கைது.!
சென்னை
வேளச்சேரியில் போலீசாரை தாக்கிய தந்தை மகன் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு,
தந்தை மகன் இருவரையும் கைது செய்த போலீசார்.
சென்னை வேளச்சேரி காந்திசாலையில் சென்னை தெற்கு மாவட்டம் 177வது வார்டு திமுக சார்பில் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நலதிட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுகவினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலை வேளச்சேரி சட்டம் ஒழுங்கு காவலர் காமராஜ் சீர் செய்த போது அவ்வழியே வந்த தந்தை மகன் இருவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர்கள் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் அங்கிருந்து சென்ற நிலையில் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே வீடியோ காட்சிகள் பரவிய நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவினர் தாக்கியதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அதற்கு காவல்துறை தரப்பில் அவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் இல்லை என விளக்கம் அளித்தனர்.
https://youtube.com/shorts/cLVMYlSytVs?si=MHXw_eH78gpjH5c6
காவலர் காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் தந்தை கணேசன், மகன் பிரீத்திபன் இருவர் மீதும் ஆபாசமாக பேசுவது, தாக்குவது, மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் இன்று போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்
S S K