மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் நித்தியாவின் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் வேடசந்தூரில் எரியூட்டப்பட்டது

மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் நித்தியாவின் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் வேடசந்தூரில் எரியூட்டப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சிறு நாகலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சார்பு ஆய்வாளர் ஜெயஸ்ரீ காவலர் நித்தியா ஆகிய இருவரும் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இருவரின் உடலும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சார்பு ஆய்வாளர் ஜெயஸ்ரீயின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதிக்கும், பெண் காவலர் நித்யாவின் உடல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டிக்கும் நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று காலை 10 மணி அளவில் கொசவப்பட்டியில் உள்ள மயானத்தில் பெண் காவலர் நித்தியா உடலுக்கு 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நித்யாவின் உடல் எரியூட்டப்பட்டது. இதில் ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அழகர்சாமி