கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டிற்கான 586 கோடி நிதியினை மத்திய அரசு வழங்கியும், தமிழக அரசு வழங்காமல் உள்ளதாக, தமிழ்நாடு பிரைமரி மெட்ரிக் சிபிஎஸ்சி பள்ளிகளின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் செய்தியாளர் சந்திப்பு. !
கிருஷ்ணகிரி
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டிற்கான 586 கோடி நிதியினை மத்திய அரசு வழங்கியும், தமிழக அரசு வழங்காமல் உள்ளதாக, தமிழ்நாடு பிரைமரி மெட்ரிக் சிபிஎஸ்சி பள்ளிகளின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்......
தமிழகத்தில் உள்ள ஒன்பதாயிரம் தனியார் பள்ளிகளின் புதுப்பிப்பு பணிக்கு இணைய வழியாக விண்ணப்பித்து இதுவரை மாநில அரசு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் பள்ளி வாகனங்கள், வட்டார போக்குவரத்து அனுமதி பெற முடியவில்லை. ஒவ்வொரு பள்ளியின் அனுமதி புதுப்பிக்காமல் இருப்பதால் மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற வில்லை.
மேலும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2024, 2025 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாயிரம் பள்ளிகளின் நிலுவைத் தொகை 586 கோடி ரூபாய் நிதியினை மத்திய அரசு விடுவித்து விட்டது. ஆனால் தமிழக அரசு பள்ளிகளுக்கு வழங்காமல் காலத் தாமதம் செய்து வருகிறது. பள்ளிகளின் புதுப்பிப்பு இன்னும் இல்லை, கட்டாயம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிதி வழங்க வில்லை, இது குறித்து தனியார் பள்ளிகளின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாமல் தனியார் பள்ளிகளை தமிழக அரசு வஞ்சிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தனியார் பள்ளிகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே ஆட்சி முடியும் தருவாயிலாவது எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
